Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தளபதி எப்படி இருக்க வேண்டும்? அன்புமணி சொல்வதைக் கேளுங்கள்

தளபதி என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அட்வைஸ் செய்துள்ளார்.

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கிப் போராடாமல் தி.மு.க அமைதி காப்பது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்காமல் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளித்து பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ''தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தளபதி என்பவர் தாமே முன்னின்று பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர்களை ஏவிவிட்டு எதிர்கொள்ளும்படி கூறக்கூடாது. எது எப்படியிருந்தாலும்  துரைமுருகன் பெயரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி. பாமகவுக்கு எதிரான அறிக்கை என்றால் அது துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில்தான் வெளிவரும். இதன் பின்னணியில் தி.மு.க நடத்தும் ஜாதி அரசியலை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளிவந்திருந்தாலும் கூட, இதை அவர் எழுதியிருக்க மாட்டார். இப்படியோர் அறிக்கை அவர் பெயரில் வந்தது அவருக்கே தெரியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில், அறிக்கையை துரைமுருகன் எழுதியிருந்தால் அது லாஜிக்காக இருந்திருக்கும். இப்படித் தப்பும் தவறுமாக இருந்திருக்காது. அறிக்கையின் இரண்டாவது பத்தியின் முதல் சில வரிகளில் பெட்ரோலிய மண்டலத்துக்கு தி.மு.க ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாக ராமதாஸ் கூறுவதில் உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த சில வரிகளில் தமிழகத்துக்கு முதலீடு வர வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டத்துக்கு ஆய்வு நடத்த கலைஞர் அனுமதி கொடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பதை செயல்தலைவரிடம் கேட்க வேண்டுமா. துரைமுருகனிடம் கேட்க வேண்டுமா என்பது தெரியவில்லை. எது எப்படியாகினும் அதற்குப் பிந்தைய வரிகளில் இத்திட்டத்துக்கு தி.மு.க தான் ஆய்வு அனுமதி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்தப் பாவத்தையும், துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement