திவ்யபாரதி மீது ஐ.ஜி-யிடம் புகார்

'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான திவ்யபாரதி மீது திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர் மதுரையிலுள்ள ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளார்.

Dhivya

ஏற்கெனவே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக திவ்யபாரதி கூறிவரும் நிலையில், அவர்மீது புகார் கொடுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தினக்கூலி துப்புரவுப்பணியாளராக நான் உட்பட 12 பேர் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். எங்களை மிரட்டி சக தொழிலாளர்களான தேக்கமலையும் அவர் மனைவியும் டீன் சித்திரைசெல்வி மீது கலெக்டரிடம் புகார் கொடுக்க வைத்தார்கள். இதற்குப் பின்னால் 'கக்கூஸ்' படத்தை எடுத்தவரும், தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவருமான திவ்யபாரதி இருந்துள்ளார். இந்த உண்மையை பின்பு தெரிந்துகொண்டு நாங்கள் டீனிடம் மன்னிப்பு கேட்டு தற்போது கல்லூரியில் பணிபுரிந்து வருகிறோம். சம்பந்தப்பட்ட தேக்கமலையையும் அவர் மனைவியையும் கடத்தி வைத்துக்கொண்டு டீன் சித்திரை செல்விக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுபற்றி நாங்களும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். எனவே, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் திவ்யபாரதி அவரது சகாக்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்த்திகாதேவி புகார் மனு அளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!