புதிய லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையரை நியமித்தது தமிழக அரசு!

லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக வி.கே.ஜெயக்கொடியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயக்கொடி வகித்து வந்த எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை விக்ரம் கபூர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜெயகொடி ஐ.ஏ.எஸ்
 

விக்ரம் கபூர் தற்போது எரிசக்தித் துறைச் செயலாளராக உள்ளார்.  உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி  ஐ.ஏ.எஸ்., கூடுதலாக  லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தார். ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை லஞ்ச ஒழிப்புக்கு  தனி ஒருவரை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. நீதிமன்ற உத்தரவால் ஜெயக்கொடி நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!