Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலியா பட் நடிக்கும் `ராஸி'!

ஆருஷி கொலைவழக்கை மையமாக வைத்து உருவான `தல்வார்' படத்தை இயக்கியவர் மேக்னா குல்ஸார். விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது 'தல்வார்'. பாலிவுட் பாடலாசிரியர் குல்ஸாரின் மகளான மேக்னா அடுத்து இயக்கும் படம் `ராஸி'.

அலியா பட்

இந்தப் படம் அடுத்த ஆண்டு மே 18-ம் தேதி வெளியாகிறது என்று மேக்னா குல்ஸார் தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார். மேக்னா இயக்கும் ஆறாவது படமான இதில் அலியா பட், `மஸான்', 'ராமன் ராகவ் 2.0' படங்களில் நடித்த விக்கி கௌஷல் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரண் ஜோகர் தயாரிக்கிறார். ஹரிந்தர் எஸ்.சிக்கா எழுதிய 'காலிங் செமத்' என்கிற நாவலைத் தழுவி உருவாகிவருகிறது. படத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக விக்கி கௌஷலும், காஷ்மீர் பெண்ணாக அலியா பட்டும் நடிக்கிறார்கள். த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் இப்படம் பஞ்சாப், காஷ்மீர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரின்போது நடந்த நிஜசம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகிக் கொண்டிருக்கிறது 'ராஸி'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement