வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (02/08/2017)

கடைசி தொடர்பு:19:05 (02/08/2017)

இம்ரான் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு

இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரராக  இருந்து, சில ஆண்டுகளாக  அரசியலில் ஈடுபட்டு வருபவர் இம்ரான் கான். சமீபத்தில், அவரது கட்சியிலிருந்து விலகிய  பெண் உறுப்பினர் ஆயிஷா குலாலாய்  என்பவர், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். 

பி.டி.ஐ என்கிற பாகிஸ்தான்  தெஹரேக்-ஈ-இன்சாஃப் கட்சியின் தலைவர்  இம்ரான் கான். சமீபத்தில், அக்கட்சியிலிருந்து விலகிய ஆயிஷா, 'இம்ரான், கட்சியில் இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதாகவும் அவ்வப்போது அவர்களுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், தனக்கு 2013-ம் ஆண்டுஅக்டோபர் மாதத்திலிருந்து தகாத குறுஞ்செய்திகள்  அனுப்பிவருவதாகவும்' கூறியுள்ளார்.

 மேலும் அவர் கூறுகையில், ”இம்ரான், பாகிஸ்தானை இங்கிலாந்து என்று நினைத்திருக்கலாம். ஒருவேளை, இந்த வயதில் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். பி.டி.ஐ கட்சியில் எந்தப் பெண்ணும் மரியாதையாக நடத்தப்படுவதில்லை. தன்மானமுள்ள  எந்தப் பெண்ணும் அந்த கட்சியில் தொடரமுடியாது” என்று தெரிவித்திருக்கிறார். 

ஆனால், இந்தக் குற்றசாட்டை இம்ரான் கட்சியைச் சேர்ந்தவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். வரும் தேர்தலில், தனக்கு இடம் ஒதுக்கப்படாததால் ஆயிஷா இவ்வாறு புகார்கள் எழுப்பியுள்ளதாக இம்ரான் தரப்பினர் கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க