ஆதார் தகவல்களைப் பாதுகாக்க வருகிறது 'தகவல் பாதுகாப்புச் சட்டம்'!

ஆதார் எடுப்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆதார்

சிம் வாங்க, ரேஷன் வாங்க, மானியம் வாங்க என அனைத்துக்கும் ஆதார் எண் அவசியம் என்ற நிலையை அரசு உருவாக்கியிருக்கிறது. ஆதார் எண் வழங்கலைச் செயல்படுத்தி வரும் UIDAI அமைப்பு ஒருபோது ஆதாரில் உள்ள தகவல்கள் முறைகேடாகவோ உளவு பார்ப்பதற்காகவோ பயன்படுத்தப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்தது. 

ஆனால், ஆதார் எண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மக்களின் தனிநபர் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு லீக் ஆன செய்தி சமீபத்தில் வெளியானது. மேலும், ஆன்லைன் ஹேக்கர்களிடம் இருந்து தகவல்களைப் பாதுகாப்பது என்பது கடினமாக உள்ளது. இதனால் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யப்படும் தனிநபர் விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் ஆகியவை முறைகேடாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று எதிர்ப்புகளும் விவாதங்களும் எழுந்தன. 

இதைக் கருத்தில்கொண்டு 'தகவல் பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் பேசிய மத்திய அரசு அதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி என் ஶ்ரீகிருஷ்ணா தலைமையில் பத்து நபர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இந்தக் குழு அந்த சட்டத்தை வரைவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!