Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க தனிப்படை..!

கன்னியாகுமரியில் ஹெல்மெட் சோதனையைத் தீவிரப்படுத்திய காவல்துறை, திருட்டுச் சம்பவங்களைக் கண்டுகொள்ள மறந்து விட்டது. கடந்த சில வாரங்களாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸாரும் தங்களை முழுமையாக  ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுத்துவது தான். போலீஸாரின் இந்த நடவடிக்கை, குமரியில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற வழிவகுத்துக்கொடுத்திருக்கிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக வீடுகள், கோயில்களைக் குறிவைத்து, திருடர்கள் கைவரிசை காட்டிவருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டுவருபவர்கள் இன்னும் சிக்கவில்லை.

சில கோயில்களில் மூலஸ்தான கதவை உடைத்து, அம்மன் கழுத்தில் உள்ள நகைகள் மற்றும் பூஜைப் பொருள்களைக் கொள்ளையர்கள், கொள்ளையடித்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி எந்தவித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையும் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. பொதுவாக, குமரியில் அதிகாலை வேளையில்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறை எப்படி ஹெல்மெட் சோதனையைத் தீவிரபடுத்தி உள்ளதோ, அதேப்போல குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதிலும் தீவிரம்காட்டி உள்ளது. கடந்த ஆண்டு, 90-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்த ஆண்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான காவல் நிலையங்களில், திருட்டு நடந்ததைப் பற்றி போலீஸாரே கவலைப்படுவதில்லை. தினமும் எத்தனை ஹெல்மெட் கேஸ் போடுவது என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.அதைத்தான் மாவட்ட காவல்துறையும் எதிர்பார்க்கிறது. தினமும் குமரிமாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட ஹெல்மெட் வழக்குகள் போடப்படுகின்றன. அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. மேலும், பல போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு அதுவே சாதகமாகிவிட்டது. இதனால், கோயில்கள், பூட்டிய வீடுகளைக் குறிவைத்து, கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள் கொள்ளையர்கள். தற்போது நாளுக்கு நாள் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதால், மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தனிப்படைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க உத்தவிட்டுள்ளார். அதன்படி, நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய துணை போலீஸ் சரகங்களுக்கும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது தனிப்படையின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர், ஏற்கெனவே நடந்த குற்றச் சம்பவங்களில் துப்பு துலக்குவது, குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close