Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு பரவிய கிராமத்தில் கலெக்டர் ஆய்வு!

மதுரை மற்றும் சுற்றுப் பகுதியில், கடந்த மாதத்திலிருந்து டெங்கு காய்ச்சல் பலரையும் தாக்கியது . தீவிர சிகிச்சையால் பலரும் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தனர். இருப்பினும் டெங்கு பாதிப்பில் உயிர்ப் பலிகளும் அரங்கேறின . மதுரையைச் சுற்றிவுள்ள குவாரிப் பள்ளங்களில் சேகரமாகும் நீர், நிலத்தடி நீராக மாறாமல் அப்படியே தேங்குவதால், ஏ.டிஸ் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தகவல்கள் வெளியாயின .

டெங்கு

 இந்நிலையில், அலங்காநல்லூர் , பாலமேடு பகுதியில் அதிக அளவு டெங்கு காய்ச்சல் பரவியதால், பாதிக்கப்பட்டவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர் .  அதில், அழகுமீனாள் என்ற எட்டு வயதி சிறுமி, சில நாள்களுக்கு முன் இறந்தார் . விகடன் இணைய தளத்தில் அதைச் செய்தியாப் பதிந்திருந்தோம். அதைத் தொடர்ந்து, சுகாதரதுறை அதிகாரிகள் சிறுமி இறந்த கிராமத்தில் அதிக கவனம் செலுத்தி விழிப்பு உணர்வு மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துவந்தனர் . இந்நிலையில், நேற்று டெங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட முடுவார்பட்டியில், மாவட்ட ஆட்சியர் வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்தார். மேலும், டெங்கு பாதிப்பால் இறந்த சிறுமி அழகுமீனாள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி விசாரித்தார் .

டெங்கு

அந்தக் கிராமத்தில் டெங்கு தடுப்பு பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பப்பாளி இலை நிலவேம்புக் கசாயம் உள்ளிட்டவை கொடுத்து, அதிகப்படியாக கவனம் செலுத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement