ஓவியாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்த 'கொக்கரக்கோ'! | 'Korakko' hotel bill quotes 'save farmers not oviya'

வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (03/08/2017)

கடைசி தொடர்பு:10:18 (03/08/2017)

ஓவியாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்த 'கொக்கரக்கோ'!

பிக் பாஸ் வந்தாலும் வந்தது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அது பற்றிதான் பேச்சு. இணையம் முதல் டீக்கடை வரை ஓவியாதான் ஹீரோ. பற்றாக்குறைக்கு, 'ஓவியா பேரவை ' வேறு ஆரம்பித்து ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

ஓவியாவுக்கு எதிரான ஹோட்டல் பில்

பல ஹோட்டல்களில் பில்லில் கூட 'சேவ் ஓவியா ' என்று அச்சடிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகம் 'ஓவியா நாடு' ஆகிக்கொண்டிருக்கையில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள 'கொக்கரக்கோ'  ஹோட்டல், ஓவியாவுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளது. இந்த ஹோட்டலின்  பில்லில், 'stop saving oviya  big boss'  , 'விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்' 'கடலூர், கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளைக் காப்பாற்றுங்கள் ' என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. 

கொக்கரக்கோ ஹோட்டல்

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் இளம்பரிதி கூறுகையில்,'' கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள் வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு எது தேவையோ அதை சிந்தித்துப் பார்க்காமல், இளைய சமுதாயம் திசை திருப்பப்படுகிறது. தேவையில்லாதவற்றைத் தலையில்வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். என்னால் முடிந்த விழிப்பு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். அன்றாடப் போராட்ட வாழ்க்கைக்கிடையே களத்தில் இறங்கி வேலைபார்க்க முடியவில்லை. என்னால் முடிந்த சிறிய முயற்சி இது '' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க