Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை அண்ணாசாலையில் பயணிகளை மிரளவைத்த விபத்து!

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

bus accident
 

 

சென்னையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது அண்ணாசாலை. இன்று காலை அதே பரபரப்புடன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. ஸ்பென்சர் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து , பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. திடீரெனக் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகையின் தடுப்புக் கம்பியில் பயங்கரமாக மோதியது. இதில் அப்படியே அந்த அறிவிப்புப் பலகை பேருந்தின் மீது விழுந்தது.

amnnasalai accident
 

இதில் பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. ஓட்டுநரும் பயணிகளும் ’காப்பாற்றுங்கள் காப்பாறுங்கள்’ என்று அபாயக் குரல் எழுப்பினர்.  இந்தச் சத்தம் கேட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தடுப்புக் கம்பியில் மோதிய பேருந்தை ஓட்டுநர் தன் சாமர்த்தியத்தால் நிறுத்தினார். இந்த விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாரும் பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்தை அங்கிருந்து அகற்றும் பணி நடந்தது. இதன்பிறகு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அண்ணாசாலையில் போக்குவரத்து சீரானது. 

annasalai

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement