Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'யங் சங் மங்' படத்தில் ஹீரோவாக நடிப்பது ஏன்? - பிரபுதேவா ஃப்ளாஷ்பேக்

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு தன்மகன்கள் ராஜூசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் மூவரும் நல்ல டான்ஸ் மாஸ்டர்கள் என்பதில் தாளமுடியாத சந்தோஷம்.  ஏதோ மனசுக்குள் ஏக்கமாய் உருவெடுத்தது சுந்தரம் மாஸ்டருக்கு, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அலுவலகத்துக்கு சென்றார். அங்கே வாய்ப்பு கேட்போர் வரிசைகட்டி நின்றுகொண்டு இருந்தனர். குஞ்சுமோனை தனிமையில் சந்தித்த மாஸ்டர் சுந்தரம் தன்மகன் பிரபுதேவாவுக்கு ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் தரும்படி கேட்டார். இந்த உண்மையை தயாரிப்பாளர் குஞ்சிமோனே பலபேரிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். அப்போது வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம் வசூலை வாரிக்குவித்துக் கொண்டு இருந்ததால் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தார், குஞ்சுமோன். டைரக்‌ஷன் ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படத்துக்கு பிறகு அவரின் அடுத்த படமான 'காதலன்' படத்தையும் குஞ்சுமோன் தயாரிப்பில் இயக்குவதற்கான வேலையில் பரபரப்பாக இருந்தார்.  'காதலன்' படத்துக்கு புதுமுகத்தை தேடிக்கொண்டு இருந்த ஷங்கரை அழைத்து சுந்தரம் மகன் பிரபுதேவாவை அறிமுகம் செய்தார், குஞ்சுமோன். அதன்பிறகு டான்ஸ் மாஸ்டர் வேலையை பார்க்கவே நேரம் இல்லாமல் நடிப்பில் பிஸியாக ஆகிவிட்டார், பிரபுதேவா. ஏ.வி.எம்.தயாரிப்பில் உருவான 'மின்சாரக் கனவு' படத்தில் இந்தி நடிகை கஜோலுக்கு ஜோடியாக நடிக்கும் ரேஞ்சுக்கு வளர்ந்தார், பிரபுதேவா.

பிரபுதேவா

டான்ஸ் மாஸ்டர் ப்ளஸ் நடிப்பு என்று இரண்டு முகத்தை காட்டிவந்த பிரபுதேவா அடுத்து மூன்றாவது முகமாக டைரக்‌ஷன் துறையில் இறங்கினார். விஜய்யை வைத்து 'போக்கிரி' என்கிற வெற்றிப் படத்தை இயக்கினார். அதன்பின் பாலிவுட்டில் கால் பதித்து கடும்பிஸியான டைரக்டரானார் இடையில் சென்னை பக்கம் எட்டிப்பார்த்த பிரபுதேவா ஐங்கரன் நிறுவனத்துக்காக  விஜய் நடித்த 'வில்லு' படத்தை இயக்கினார். அதே ஐங்கரன் நிறுவனத்துக்காக தங்கர்பச்சான் இயக்கிய 'களவாடிய பொழுதுகள்' படத்தில் ஹீரோவாக நடித்தார். பிரபுதேவாவின்  டைரக்‌ஷன் திறமையை கண்டு வியந்த தயாரிப்பாளர் சிவஶ்ரீ சினிவாசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிறுவனத்துக்கு ஒரு படத்தை  இயக்கித் தருமாறு கேட்டு, பிரபுதேவாவுக்கு அட்வான்ஸ் பணமும் கொடுத்தார்.  அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனை சந்தித்த பிரபுதேவா, படத்தின் கதையை  சொல்லி இருக்கிறார். 'இப்போதைக்கு நீங்க டைரக்‌ஷன் செய்ய வேணாம். 'தேவி' படம் நல்லா போச்சு. அதனால் நடிச்சு கொடுத்தாலே போதும்' என்று தயாரிப்பாளர் சொல்ல, பிரபுதேவா முகத்தில் மகிழ்ச்சி. அப்படித்தான் அர்ஜூன் இயக்கத்தில் உருவாகிவரும் 'யங் மங் சங்’ படத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்புக்கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement