Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடிப் பெருக்கு : மேட்டூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

இன்று ஆடிப் பெருக்கையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றில் நீராடுவதற்காகக் கல்லூரி மாணவ, மாணவிகள், புதுமணத் தம்பதிகள், சுற்றுலாப் பயணிகள் என அலையலையாக அதிகாலையிலிருந்து மேட்டூரில் குவிந்துள்ளார்கள். இவர்கள் காவிரியில் குளிப்பதற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டிருப்பதோடு, பாதுகாப்பாகக் குளிப்பதற்கான மரக்கட்டைகளைக் கொண்டு தடுப்புச் சுவர்களையும் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அமைத்திருக்கிறார்கள்.

aadi perukku

 

மேட்டூர் காவிரி ஆற்றின் ஓரத்தில் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை கும்பல் கும்பலாகக் குளியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். குளித்து முடித்தவர்கள் புத்தாடைகளை அணிந்து கொண்டு குச்சி ஐஸ் சப்பியவாறு கரையோர முனியப்பன் கோவிலை நோக்கி பயணிக்கிறார்கள். முனியப்பனுக்குக் கற்பூரத்தைக் கொளுத்தி ஒரு சலாம் போட்டு விட்டு அருகிலுள்ள கடைகளில் சுடச் சுட மீன் குழம்போடு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் விட்டு ஒய்யாரமாக பூங்காக்களில் பவனி வருகிறார்கள்.

இதுப்பற்றி  புதுமணத் தம்பதிகளான அரசு, சிவரஞ்சனியிடம்  கேட்டதற்கு, '' நாங்க சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து வந்திருக்கிறோம். சிவரஞ்சனி எங்க மாமன் பொண்ணு. போன ஜூன் மாதம்தான் எங்களுக்குத் திருமணம் ஆனது. நான் பல முறை பேச்சுலராக வந்திருக்கிறேன். இப்ப என் மனதுக்குப் பிடித்த மனைவியோடு வந்திருக்கிறேன். இதுவும் ரொம்ப ஜாலியாக இருக்கிறது.

aadi perukku


நாங்க காலை 7 மணிக்கே வந்து விட்டோம். குடும்பத்தோடு காவிரியில் குளித்து விட்டு சாமியும் கும்பிட்டாச்சு. சாப்பிட சென்றுக் கொண்டிருக்கிறோம். என்றவரை இடைமறித்த சிவரஞ்சனி, ''நாங்க குடும்பத்தோடு வருடம் வருடம் ஆடிப்பெருக்கிற்கு மேட்டூர் காவிரிக்கு வருவது வழக்கம். திருமணம் ஆன பிறகு கணவரோடு இங்கு வருவது இதுவே முதல் முறை. என் கணவரோடு இங்கு வந்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை போல நிறைய புதுமணத் தம்பதிகள் வந்திருக்கிறார்கள். புதுமணத் தம்பதிகள் ஆற்றில் குளித்து விட்டு தாலிக் கயிற்றை மாற்றினால் கணவரின் ஆயுட் காலம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். அதனால் பல புதுமணத் தம்பதிகள் வந்திருக்கிறார்கள்'' என்றார்.

கல்லூரி மாணவர் முருகேஷ், ''நாங்க சேலம் சாரதி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து 10 மாணவர்கள்  வந்திருக்கிறோம். நாங்க கடந்த வாரமே ஆடிப் பெருக்கிற்கு மேட்டூர் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம். காலை 7 1/2 மணிக்கு சேலம் டூ மேட்டூர் ரயிலில் ஏறினோம். 8 1/2 மணிக்கு இங்கு வந்தோம். 2 1/2 மணி நேரம் ஆற்றில் குளித்தோம். ரொம்ப ஜாலியாக இருந்தது. இதில் சிலருக்கு புது அனுபவமாகவும் இருந்தது. காலையில் வந்ததும் சாப்பாட்டாற்கு கடையில் ஆடர் கொடுத்து விட்டு தான் வந்தோம். போய் சாப்பிட்டு விட்டு சுற்றி பார்க்க வேண்டும்'' என்றார்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close