"பசுவின் கோமியம் குடித்தால் உடல்நிலை சரியாகும்''- சொல்கிறார் பாஜக எம்பி

மீனாட்சி லெகி

''கிட்னி செயலிழப்புக்கு பசுவின் கோமியம் உதவிப் புரியும்'' என்று  பி.ஜே.பி எம்.பி மீனாட்சி லெகி மக்களவையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மீனாட்சி லெகி, "பசுக்களின் கோமியம் உடலுக்கு மிகவும் நல்லது. அரசுச் சட்ட ஊழியர் ஒருவர் தன்னுடைய உடல்நலக் குறைவின்போது கோமியம் குடித்தார். அவருக்கு உடல்நிலை சரியானது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அரசாங்கம் பசுக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவைப்படும் பழைமையான செடிகளை வளர்க்க ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "மருந்து எப்போதும் மருந்துதான்" என்றார்.

மீனாட்சி லெகி சொன்னதற்கு பதிலளிக்கும் விதமாக விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறுகையில், 'ராஷ்ட்ரிய கோம்பாங் உத்தாபக்த மிஷின்' கீழ் கர்ணலில் ஒரு மரபணு மையம் வரவிருக்கிறது. இப்போது இருக்கும் முன்னணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே சற்று பிரச்னையாக இருக்கிறது. விரைவில் அதைச் செயல்படுத்துவோம்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!