கன்றுக்குட்டி ஈன்றது கமிஷனர் வீட்டு காங்கேயம் மாடு... குவியும் வாழ்த்துகள்!

திருச்சி மாநகரைக் கட்டிக் காக்கும் பொறுப்பில் இருப்பவர் அருண் ஆறுமுகம் ஐ.பி.எஸ். அதாவது, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர். பராம்பர்யமான நம் நாட்டு விஷயங்களில் மிகுந்த அக்கறைக் கொண்டவர். அழிந்து வரும் நாட்டுமாடுகளைப் பாதுகாக்கும் பொருட்டு அருண் ஆறுமுகம், தன் வீட்டில் காங்கேயம் ரக மாடுகளை வளர்த்து வந்தார். பிசியான தன் ஷெட்யூலுக்கிடையே அந்த மாடுகளோடு சிறிது நேரம் செலவழித்துவிட்டுத்தான் டூட்டிக்குப் போவார். கமிஷனர் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்தன காங்கேயம் மாடுகள்.

கன்று ஈன்ற கமிஷனர் வீட்டு காங்கயம் பசு

இதற்கிடையே பசுமாடு கர்ப்பமடைந்தது. கர்ப்பிணிப் பெண்களை எப்படிப் பார்த்துக் கொள்வார்களோ அதே கவனிப்பு பசுவுக்குக் கிடைத்தது. இந்தநிலையில், காங்கேயம் பசு அழகான ஆண் குட்டியை ஈன்றது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அருண் ஆறுமுகம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். வீட்டுக்குப் புது வரவான காங்கயம் கன்றைத் தாயுடன் படம் எடுத்து ஃபேஸ்புக்கில் அவரின் நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். குழந்தை பிறந்த மாதிரி கமிஷனருக்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து குவிந்து வருகிறது. 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆறுமுகத்திடம் பேசியபோது, ''நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அனைத்து மக்களுமே அக்கறைக் காட்ட வேண்டும். நண்பர் ஒருவர்தான் இந்தப் பசுவை எனக்குத் தந்தார். தற்போது, நான் வளர்த்து வருகிறேன். குட்டி ஈன்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்கா சென்று விட்ட என் நண்பருக்கும் பசுவுடன் கன்று இருப்பதுபோல போட்டோ எடுத்து அனுப்பினேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நாட்டு மாடுகள் முதல் நாட்டுப்புறக் காளைகள் வரை வளர்த்தெடுக்க வேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!