Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

300 மோசடி நிதிநிறுவன ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள் மற்றும் ஆப்பிள்!

கூகுள், ஆப்பிள் ஆகியவற்றின் ஆப் ஸ்டோர்களில் இருந்து 300க்கும் மேலான மோசடி நிதிநிறுவன ஆப்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. இவை உரிமம் பெறாத ஆப்ரேட்டர்களுடையது என்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்

இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கை முழுவதுமாக ஆப்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நம்முடைய மொபைல்களில் பல்வேறு ஆப்களைத் தரவிறக்கம் செய்திருப்போம். ஆனால், அவையெல்லாம் உண்மையான ஆப்கள் தானா என்பது நமக்குத் தெரியாது. மொபைல் ஆப்களில் பல ஆப்கள் போலியானவையாகவும், மோசடி செய்யக் கூடியதாகவும் நம்முடைய தகவல்களைத் திருடக்கூடியதாகவும் உள்ளன.

அவற்றில் ட்ரேடிங் வசதிகளைக் கொண்ட 300 மோசடி நிதி நிறுவன ஆப்களை ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கமிஷன் கண்டுபிடித்து அவற்றை நீக்கியிருக்கிறது. இவை உரிமம் பெறாத ஆப்ரேட்டர்களால் உருவாக்கப்பட்ட மோசடி ஆப்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement