Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது"- உச்ச நீதிமன்றம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் மத்திய அரசிடம் அதிரடியாக பல கேள்விகளைக் கேட்டனர்.

supreme court


 'காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

இந்த வழக்கு, தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இதனால், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதாடினார். 
அதன் பின்னர், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம், "காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிகழிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் பின்வாங்கியது ஏன்? " என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தது. மத்திய அரசு விரைவில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement