Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென் மாவட்டத்தைப் புறக்கணிக்கிறாரா முதல்வர் பழனிசாமி?

தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்று பேரறிஞர் அண்ணா அன்று தமிழகத்தில் இருந்து மத்திய அரசை வசைபாடினார். ஆனால், தமிழ்நாட்டுக்குள்ளேயே தென்மாவட்டம்; தேய்வதும் வடமாவட்டம் வளர்வதுமாகத் தற்போதைய அ.தி.மு.க அரசின் முதல்வர் எடப்பாடி நடந்துகொள்கிறார் என்று கொதித்தெழுகிறார்கள் தென்மாவட்ட மக்கள்.


   

தமிழகம் முழுவதும் 80 அரசுக் கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. 139 அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகள் 500-க்கும் மேற்பட்ட தனியார் கலைக் கல்லூரிகள் என தமிழகம் முழுவதும் இயங்கிவருகின்றன. இருந்தபோதிலும் தென்மாவட்டங்களில்தான் அரசுக் கலைக் கல்லூரிகள் குறைவாக இருக்கின்றன. இந்தாண்டு தமிழக அரசு புதிதாக எட்டு கலைக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் குடவாசல், நாகை மாவட்டம் சீர்காழி, ஈரோடு மாவட்டம்  திட்டமலை, வேலூர் மாவட்டம் மாதனூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், தருமபுரி மாவட்டம் பாலகோடு மற்றும் விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் அரசுக் கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்திருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில், சிவகங்கை நகராட்சி முன்னாள் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுணன் தமிழக முதல்வர் எப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `தமிழகம் உயர் கல்வித் துறையில் இந்திய நாட்டில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் புதிய எட்டுக் கல்லூரிகள் தொடங்கப்படுவதில் கிராமப்புற மாணவ மாணவிகள் பயனடைவார்கள்.

அதே நேரத்தில், தென்மாவட்டத்துக்கென்று ஒரு கல்லூரிகூட இடம்பெறவில்லை. இதே ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது தென்மாவட்டத்துக்குத் தனிக் கவனம் செலுத்துவார். காரணம் வேலைவாய்ப்பு, கல்வி கற்கும் வாய்ப்பு இங்கு குறைவு. இதனால் சாதிக்கலவரம் ஏற்படுகிறது என்று ஜெயலலிதா தெரிந்திருந்தார். சாதிக்கலவரத்துக்கு அமைக்கப்பட்ட கமிஷன்கூட கல்லூரிகள் இந்தப் பகுதியில் தொடங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், சிவகங்கை மாவட்டத்துக்கு மானாமதுரையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி நடப்பாண்டில் தொடங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ என்று எழுதியிருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close