Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி ரெய்டுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்! - மத்திய அமைச்சர்

வருமானவரித்துறை ரெய்டுகளுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.  

கர்நாடகா காங்கிரஸ்

வரும் 8-ம் தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை அம்மாநில பா.ஜ.க அரசு குதிரை பேரம் நடத்தி பேரம் பேசுகிறது என்பதால் கர்நாடகாவுக்கு அழைத்து வந்திருந்தனர். இந்நிலையில், குஜராத் எம்.எல்.ஏ-க்களை தனது ரிசார்ட்டில் வைத்திருந்த கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் தொடங்கிய வருமானவரி ரெய்டு இதுவரை 60 இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமார், "கறுப்புப்பண ஒழிப்புக்கு என மேற்கொள்ளப்படும் வருமானவரி சோதனைகளுக்கு மாநில அரசு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து கடமையைச் செய்யும் மத்திய அரசுமீது குற்றஞ்சாட்டக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். இன்று காலை சிவக்குமாரின் மாமனார் வீட்டிலும் உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement