Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமேஸான் வேலைவாய்ப்பு முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்

அமேசான்

மெரிக்காவில் அமேஸான் நிறுவனம் நடத்திய மெகா வேலைவாய்ப்பு முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  திரண்டனர். 
அமெரிக்காவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸான், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் 50,000 பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டது. 


இதுகுறித்த அறிவிப்பைக் கடந்த வாரம் வெளியிட்ட அமேஸான் நிறுவனம், நியூயார்க், மேரிலாண்ட், பால்டிமோர் ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று நடத்தபட்ட இந்த முகாமில், பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதலே திரள ஆரம்பித்தனர். ஆகஸ்ட் மாத வெயிலையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்தனர்.

பெரும்பாலான வேலைகள் அமேஸான் விற்பனையகத்தில் அளிக்கப்படும். அமேஸான் நிறுவனம் பால்டிமோர் நகரில் 1,200 பேரை வேலைக்கு எடுக்க உள்ளது. அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மேரிலாண்ட்டில் வேலைக்கு எடுக்கும் நபர்களின் ஊதியத்தைவிட அதிகமாக வழங்கப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், சுகாதார காப்பீடு, ஓய்வு ஊதியத் திட்டங்கள் ஆகிய சலுகைகளும் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமேஸான் நிறுவனம் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கே இத்தகைய வேலைகளில் முன்னுரிமை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement