2018-ல் ஆடை விற்பனையிலும் இறங்கும் பதஞ்சலி!

யோகா குரு பாபா ராம்தேவ்வால் ஆரம்பிக்கப்பட்ட பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அடுத்தடுத்த அதிரடிகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. எஃப்எம்சிஜி துறையில் கால் பதித்து சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையெல்லாம் ஓரங்கட்டி சந்தையைப் பிடித்தது பதஞ்சலி நிறுவனம். 'சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்' என்ற கோஷத்தை முன் வைத்து அதிரடி உத்திகளின் மூலம் இந்திய சந்தையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது பதஞ்சலி.

பதஞ்சலி

பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் எப்படி இருக்கிறதோ அதைப் போலவே பதஞ்சலி தனது தயாரிப்புகளையும், பேக்கேஜ்களையும் கொண்டு அசத்துகிறது. இந்த நிலையில், எஃப்எம்சிஜி துறைத் தொடர்ந்து உட்கட்டமைப்பில் இறங்குவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அது நிஜமாவதற்குள் அடுத்த அதிரடியை அறிவித்திருக்கிறார் பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம் தேவ்.

இந்தியாவில் ஆடை விற்பனையிலும் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இதில் எல்லாத் தரப்பினருக்கும் எல்லா வகையிலுமான ஆடைகள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!