ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை: ட்ரம்ப் கையெழுத்திட்டார்!

ரொனால்ட் ட்ரம்ப்

ஷ்யாவின்மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதாவில் கையொப்பமிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், ரஷ்யாவின்மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டார். அதன்படி ரஷ்யாவின்மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அனாலும், ட்ரம்ப் மசோதாவுக்கு ஆதரவு தருவாரா, மாட்டாரா எனப் பல விவாதங்கள் எழுந்தன.  இந்நிலையில், இன்று, புதிய மசோதாவில் கையொப்பமிட்டார் ட்ரம்ப். இதனை, அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியன் கோன்வே உறுதிசெய்திருக்கிறார். இதன்மூலம், ரஷ்யாவில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யும் முதலீட்டுக்கு உச்ச வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்துப் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், "ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கக்கூடிய பொருளாதாரத் தடையானது முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் பலவீனமானவராகவே இருப்பதாக நினைக்கிறோம்" எனக் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு உறவில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதாரத் தடையால் வரும் சாதக, பாதக செயல்பாடுகள் இனிவரும் காலங்களில்தான் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!