வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (03/08/2017)

கடைசி தொடர்பு:20:27 (03/08/2017)

பிளாஸ்டிக் இல்லாத காவிரி: திருச்சி தன்னார்வலர்கள் விழிப்பு உணர்வு முயற்சி!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சியில் கூடிய மக்களிடம் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக துணிப்பைகள் வழங்கி விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிளாஸ்டிக் இல்லா காவிரி

ஆடி -18 பண்டிகையை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திருச்சி மட்டுமல்லாமல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் எனப் பல மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் கூடுவார்கள். அப்படிக் கூடும் பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் விதமாகவும், அந்த நிகழ்வின்போது காவிரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால் உண்டாகும் விளைவுகள் குறித்தும், இதனைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, விழிப்பு உணர்வு உண்டாக்கும் வகையில் பொதுமக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளைப் பெற்றுக்கொண்டு, தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பைகள் விநியோகித்து, "பிளாஸ்டிக் என்னும் எமன்" என்ற புத்தகம் இன்று வழங்கப்பட்டது.

தண்ணீர் அமைப்புத் தலைவர் சேகரன் தலைமையில், அந்த அமைப்பின் செயலர் நீலமேகம், இணைச் செயலாளர்களான தாமஸ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் பாலசுப்ரமணியன், திருச்சி மாநகராட்சி சுகாதார அலுவலர், ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு உதவி ஆணையர் ஸ்ரீதர், குற்றப்பிரிவு உதவி ஆணையர் மலைச்சாமி, சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் உமாசங்கர், குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சகிதமாக சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாகத் துணிப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,

அடுத்து 50-க்கும் மேற்பட்ட ஜென்னீஸ் அகாடமி தண்ணீர் மாணவர் மன்ற உறுப்பினர்கள், தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் , மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தண்ணீர் அமைப்பு சார்பில் 5000 துணிப்பைகளும், "பிளாஸ்டிக் என்னும் எமன்" என்ற புத்தகம் விநியோகித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க