Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`` ‘A’ சான்றிதழ் வேண்டுமா... 48 இடங்களை நீக்குங்கள்''- கண்டிஷன் போடும் சென்சார்!

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடிப்பவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவரின் அடுத்த படம் ‘பாபுமோஷய் பாந்தோக்பாஸ்’. இந்தப் படம் சென்சாருக்குச் சென்று மிகுந்த பரபரப்புடன் திரும்பியிருக்கிறது. 

சென்சார்

நவாஸுதீன் சித்திக், பிடிதா பேஹ் நடிப்பில், த்ரில்லர் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது ‘பாபுமோஷய் பாந்தோக்பாஸ்’. குஷன் நேன்டி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் தணிக்கைக்காகச் சென்றபோது, `இந்தப் படத்தில் பாலியல் சம்பந்தமானக் காட்சிகள் மற்றும் கொச்சையான வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தப் படத்துக்கு  ‘A’ சான்றிதழ்தான் தரமுடியும்' எனத் தெரிவித்தனர் சென்சார் அதிகாரிகள். மேலும், ` ‘A’ சான்றிதழ் தருவதற்குக்கூட மொத்த படத்தில் குறைந்தது 48 இடங்களிலாவது கத்திரி போடவேண்டியது வரும்' என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியில் உள்ளனர். 

சென்சார் சர்ச்சைக் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் MS ஷரஃப் பேசினார், “சென்சார் அதிகாரியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினோம். படத்துக்கு `A' சான்றிதழ் கொடுத்திருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். `அடல்ட் படம் என்பது முடிவாகிவிட்ட நிலையில், 48 இடங்களில் எதற்காக கட் செய்ய வேண்டும்?' எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கு,  `ஏ சான்றிதழ் என்றாலும் சிறுவர்களும் படம் பார்க்க வாய்ப்பிருக்கிறது’ என்று வேடிக்கையாக வாக்குவாதம் செய்தனர்” என்று தன் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார் தயாரிப்பாளர்.  

பட்ஜெட்டுக்கும் நடிகர்களுக்கும் ஏற்றமாதிரிதான் சென்சார் அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், இந்தப் படம் குறித்த சர்ச்சை, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘உட்தா பஞ்சாப்’, ‘அனார்கலி‘, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படங்களைத் தொடர்ந்து, பாலிவுட்டில் சென்சார் கையில் சிக்கியிருக்கிறது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement