திருப்பூர் குப்பைமேட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்..!

கொலை

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டாம்பாளையம் பகுதியில் மக்கள் குப்பை கொட்டிச் செல்லுமிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று மதியம் கண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி  குப்பாண்டம்பாளையம் எனும் இடத்தில் அமைந்திருக்கும் மின்வாரியம் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டிச் செல்வது வழக்கம். இன்று வழக்கம்போல அவ்விடத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அள்ளுவதற்காக வந்த சிலர், அங்கு அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு முன்பாகவே அந்த இடத்தில் சரக்கு வாகனத்தில் வந்த சிலர் குப்பைகளை கொட்டும்போது, இந்த ஆண் சடலத்தையும் சேர்த்து வீசிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஆண் சடலம் பலத்த காயங்களுடன் சிதைக்கப்பட்டு இருப்பதால், யார் அந்த நபர், அவரை கொலை செய்து குப்பையில் வீசிய நபர்கள் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர் திருப்பூர் காவல்துறையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!