தமிழக வழக்கறிஞர்களின் பட்டினிப் போராட்டத்துக்கு கன்னட அமைப்பு ஆதரவு!

யர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி நடக்கும் வழக்கறிஞர்களின் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்துக்கு, கன்னட மொழி உரிமை அமைப்பான, 'கன்னட பனவாசி பலிகா' ( Banavasi Balaga) ஆதரவு தெரிவித்துள்ளது.

கன்னட பனவாசிபலிகா கடிதம்

இது தொடர்பாக அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் மாநில மொழியாகிய தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு, எங்கள் அமைப்பின் சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

உங்களின் இந்தப் போராட்டம், ஜனநாயகத்தை வலுப்படுத்தி முன் நகர்த்த உதவும் ஓர் போராட்டமாகும். நம் மொழி உரிமைக்காக நாம் போராடிக்கொண்டிருப்பது மிகவும் துயரமான ஒரு விஷயமாகும். ஆனாலும் நம் மக்களின் மொழி உரிமையானது ஏற்கப்படும் வரை நாம் போராடுவோம்.

உயர்நீதிமன்றத்தில் மக்களின் மொழியில் வழக்காடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களின் மொழியில் இருக்கும்போதுதான் அது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

பட்டினிப் போராட்டம்

இந்தப் போராட்டத்தில், நீங்கள் நிச்சயமாக வெல்லவேண்டும். ஏனெனில் இந்த வெற்றி, தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக இருக்காது, இந்தி பேசாத அனைத்து மாநில மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!