Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நித்யானந்தா சீடர்களாலும் பெண்களுக்கு ஆபத்து..”- புகார் கூறும் காஞ்சிபுரம் மக்கள்

நித்யானந்தா சீடர்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் தங்கி பணிபுரிகிறார்கள். இந்த நிலையில், "நித்யானந்தா தனது சீடர்களை அனுப்பி மடத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். நித்யானந்தா பிடியில் இருந்து மடத்தை மீட்கவேண்டும்" என தொண்டை மண்டல அனைத்து முதலியார் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தொண்டை மண்டல முதலியார் சங்கத்தின் நிறுனத்தலைவர் விஜயகுமார் “காஞ்சிபுரத்திலுள்ள தொண்டை மண்டல ஆதின மடம், மிகவும் பழைமையான மடம். இதன் 232-வது மடாதிபதியாக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் இருந்துவருகிறார். மடத்திற்குச் சொந்தமாக காஞ்சிபுரம், கீழ்வேலூர், சிறுவள்ளூர், மதுராந்தகம், என தமிழகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்துகள் இருக்கின்றன. வங்கியிலும் ஒன்றரை கோடி ரூபாய் அளவில் பணம் உள்ளது. இந்த சொத்துகளையெல்லாம் நித்யானந்தா கைப்பற்ற நினைக்கிறார். காஞ்சிபுரம் மடத்தை நித்யானந்தா பெங்களூரில் இருந்தே இயக்குகிறார். நித்யானந்தாவின் சீடர்கள் சொல்வதையே ஞானதேசிக சுவாமிகள் கடைப்பிடிக்கிறார். இதனால் நித்யானந்தா கட்டுப்பாட்டில் மடம் உள்ளது என்பதும், மேலும், மடத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க இவர்கள் திட்டமிட்டிருப்பது உறுதியாகிவிட்டது.

மடத்தில் உள்ள ஆத்மலிங்கத்தை ஞானதேசிக சுவாமி அணியாமல் நித்யானந்தா கொடுத்த ருத்ராட்ச மாலையை அணிந்துகொள்கிறார். சுவாமிக்கு என ஒரு பூஜையறை இருக்கிறது. அதில் அவர் மட்டுமே பூஜை செய்ய வேண்டும். ஆனால், நித்யானந்தாவின் ஆட்கள் நித்யானந்தா படத்தை வைத்து பாலாபிஷேகம், தேனபிஷேகம் என அமர்க்களமாக பூஜை செய்து வருகிறார்கள். மேலும், நித்யானந்தாவின் சீடர்கள் பெண்களுடன் இங்கேயே தங்கி இருக்கிறார்கள். நித்யானந்தாவின் சீடர்கள் சன்யாசம் பூண்டதற்கான அடையாளமே தெரியவில்லை.

எப்போதும் 'லேப்டாப்'', 'ஹெட்செட்' என படுஜாலியாக மயக்க நிலையிலேயே இருக்கிறார்கள். தன்னைப் பார்க்கவரும் பக்தர்களுக்கு குளிக்காமல் விபூதி கொடுப்பது, பெண்களை தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்வது என சுகபோகமாக வாழ்கிறார்கள். இதனால் பெண்களை மடத்துக்கு அனுப்பவே பயமாக உள்ளது.

ஏற்கெனவே நித்யானந்தா மடத்துக்குச் செல்லும் பெண்களுக்கு, தீர்த்தத்தில் ஒருவித மயக்க நிலைக்கு தள்ளக் கூடிய வஸ்துக்களை கலந்துகொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், இந்த மடத்திலும் பெண்களுக்கு தீர்த்தத்தில் ஏதாவது கலந்துகொடுத்து மயக்கி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. நித்யானந்தா என்றாலே பெண்களைப் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாக வருகிறது. விஜயகுமார்இதனால் மடத்தைப் பற்றி அதிகமாக வெளியில் தவறாகப் பேசுகிறார்கள். இத்தனை தவறுகளையும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி சரிசெய்து கொள்ளலாம் என முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு செவிசாய்க்காமல் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார் ஞானதேசிக சுவாமிகள். அவரைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அவர்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகுதான் பெங்களூரில் நித்யானந்தாவுடன் சுவாமிகள் தங்கியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், காவல்துறையினர் மூன்று நாள்களுக்குள் காஞ்சிபுரம் மடத்துக்கு வரவேண்டும். இல்லையென்றால் புகார்மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றனர். அதைத்தொடர்ந்து 1.8.17 இரவு ஞானதேசிக சுவாமிகள் காஞ்சிபுரம் வந்துள்ளார். நித்யானந்தாவின் ஆட்கள் மடத்தைவிட்டு வெளியேற வேண்டும். மடத்தின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், நாங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நித்யானந்தாவின் ஆட்கள் மடத்தைவிட்டு வெளியேறும்வரை போராட்டம் தொடரும்” என்கிறார் ஆதங்கத்துடன்.

தொண்டை மண்டல அனைத்து முதலியார் சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், நேற்று காலை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி, நித்யானந்தாவின் சீடர்களிடம் விசாரணை மேற்கொண்டார். 

“நித்யானந்தாவின் சீடர்கள் இங்கு பயிற்சி பெறவே வந்திருக்கிறார்கள். தேவையில்லாமல் மடாதிபதிமீது வேண்டுமென்றே சிலர் பழி சுமத்துகின்றனர்.” என்று மடத்தின் சார்பில் சிலர் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement