Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபோன் திருட்டுக்காக விழுந்த அரிவாள் வெட்டு! - தி.நகர் திகில்

தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள பூர்விகா மொபைல் ஷோருமிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனைத் திருடிக்கொண்டு ஓடியவரைத் துரத்திப் பிடிக்க முயன்றவர் அரிவாளால் வெட்டப்பட்டார். கூட்டம் நிறைந்த தி.நகர் பகுதியில், பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

திநகர்

 பாண்டி பஜாரில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூமில் மொபைல் வாங்குவதுபோல வந்த நபர், திடீரென்று ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை எடுத்துக்கொண்டு ஓடினார். உடனே கடையிலிருந்த ஊழியர்கள் அவரை விரட்டிச் சென்றனர். 

அப்போது, திருடிச்சென்றவருடன் சிலர் கூட்டுசேர்ந்துகொண்டு, பிடிக்க வந்தவர்களை அரிவாளால் தாக்கத் தொடங்கினர். அப்போது, ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. எப்படியோ சம்பவ இடத்தில் இருந்தவர்களின் உதவியால் திருடியவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அரிவாளால் தாக்கப்பட்டவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement