நித்யானந்தாவுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் வலுக்கும் போராட்டம்!

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச மடத்தில், நித்யானந்தாவின் சீடர்கள் தங்கிப் பணிபுரிகிறார்கள். இந்த நிலையில்,  'நித்யானந்தா தனது சீடர்களை அனுப்பி மடத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். நித்யானந்தா பிடியிலிருந்து மடத்தை மீட்க வேண்டும்' என தொண்டை மண்டல அனைத்து முதலியார் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

நித்யானந்தா காஞ்சிபுரம்

தொண்டை மண்டல அனைத்து முதலியார் சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 1-ம் தேதி, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ரமணி, நித்யானந்தாவின் சீடர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

நித்யானந்தாவுக்கு எதிராக ஆர்பாட்டம்

“நித்யானந்தாவின் சீடர்கள், பெண்களை தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதனால், பெண்களை மடத்துக்கு அனுப்பவே பயமாக உள்ளது. நித்யானந்தா என்றாலே பெண்களைப் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாக வருகிறது. இதனால், நித்யானந்தா சீடர்கள் உடனடியாக மடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” எனத் தொண்டை மண்டல முதலியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நித்யானந்தாவுக்கு எதிராக களத்தில் குதித்தனர்.  

இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும், “நித்யானந்தா சீடர்களை நான் வெளியேற்றப் போவதில்லை” எனக் கூறிவருகிறார், ஞானதேசிக பரமாச்சாரியார். இதனால் கோபமுற்ற தொண்டை மண்டல முதலியார் அமைப்புகள், இன்று காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நித்யானந்தாவின் ஆட்களை வெளியேற்றுவதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!