Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்

thoothukudi thermal 

காற்றாலைகள்மூலம்  மின் உற்பத்தி அதிகமானதால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 5 யூனிட்டுகளில், ஒவ்வோர் யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. தற்போது காற்று அதிகமாக அடித்துவருவதால், காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி அதிக அளவில் கிடைப்பதால், மின் உற்பத்தி தட்டுப்பாடில்லாமல் நடந்துவருகிறது. இதனால், அடிக்கடி மின் உற்பத்தியை நிறுத்தி, பிறகு  தொடருமாறு அனல் மின் நிலையங்களுக்கு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கு, ஏற்கெனவே பராமரிப்புப் பணிக்காக 1-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட்டில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து, மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கும் நேரத்தில், ’மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டாம்’ என மின்வாரியம் தெரிவித்ததால், முதல் யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்துவைக்கப்பட்டுள்ளது. ‘

மீதமுள்ள 4 யூனிட்டுகளில்,  தற்போது 3-வது மற்றும் 5-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகத்தான் இந்த இரண்டு யூனிட்டுகளிலும்  மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரவலாக சொல்லப்பட்டு வந்த நிலையில், ‘’ தாமிரபரணியிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் படி, விநியோகிக்கப்பட்டுவந்த தண்ணீர், கடந்த சில மாதத்திற்கு முன் நிறுத்தப்பட்ட நிலையிலும், தனியார் லாரிகள்மூலமாக அனல் மின் நிலையத்துக்கு தண்ணீர் வாங்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. தற்போது, போதிய அளவில் மின்சார உற்பத்தி  இருப்பதால், 3-வது மற்றும் 5-வது  யூனிட்டுகளில் மின் உற்பத்தியை மின்சார வாரியம் நிறுத்தச் சொன்னதன் பேரில், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2-வது மற்றும் 4-வது யூனிட்டுகள் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. காற்றாலைகள்மூலம் மிகை மின் உற்பத்தி கிடைத்து வருவதால்தான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் துவக்கப்பட்டுவருகிறது. தண்ணீர் பிரச்னைக்கும் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கும் சம்பந்தமில்லை.’’ என அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement