தோவாளை பூக்கள் விலை திடீர் உயர்வுக்கு காரணம் இதுதான்!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை,மிகப் பெரிய பூ மார்கெட்டாக இருந்து வருகிறது. இங்கு பெங்களூரில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த சில வாரங்காள பூக்களின் உற்பத்தி குறைவாக காணப்பட்டது. தற்போது மல்லிகைப் பூவின் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பழவூர், கோழியான் கிளம், சிதம்பரபுரம். ஆவரை குளம் பகுதிகளில் இருந்தும் பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால்  தோவாளையில் பூக்களின் விலை சற்று குறைந்தது. 

ஆடி மாதத்தில் விற்பனை மந்தமாகவே இருக்கும். ஆனால், பூக்களின் வரத்து அதிகமாக காணப்படும். தற்போது பூக்களின் வரத்து வழக்கத்தைவிட குறைந்துள்ளது. விலையும் எப்போதும் ஆடி மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆடிபெருக்கை  ஒட்டியும், ஆடி வெள்ளியை ஒட்டி பூக்களின் விற்பனை தோவாளையில் அதிகரித்தது. வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் காலை முதல் பூ மார்கெட் களை கட்டி காணப்பட்டது. தற்போது பிச்சி, மல்லிகைப்பூக்கள் வழக்கத்தைவிட அதிகமாக விற்கப்படுகிறது. சம்பங்கி, அரளிப் பூக்களின் விலை முன்பைவிட அதிகதிரித்துள்ளது.

தற்போது பிச்சி பூ 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. அதுபோல் மல்லிகைப் பூவும் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி என்பதால் பூக்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். தொடர்ந்து வரும் ஆவணி மாதம், திருமண காரியங்கள் அதிகம் நடைபெறும். அதன்பின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!