ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திர கிரகணம்; செப்டம்பர் 6-ம் தேதி ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திர கிரகணம் என்பதால், செப்டம்பர் 6 -ம்தேதி 'ஆவணி அவிட்டம்' அனுஷ்டிக்கப்படுகிறது. ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி வருகிற திங்கட்கிழமை (7-8-2017)  சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது. இதனால்,  ஆகஸ்ட் 7 -ம் தேதி நடைபெற இருந்த, 'ஆவணி அவிட்டம்' நிகழ்ச்சி அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ம் தேதிக்கு நடைபெறுமென்று காஞ்சி சங்கர மடம் சார்பாக, மஹா பெரியவா ஆசீர்வாதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுபற்றி, காஞ்சி சங்கர மடம் பஞ்சாங்க சபைத்தலைவரும் தர்ம சாஸ்திர நிபுணருமான சுந்தரராம வாஜ்பாயிடம் கேட்டோம்.

'இந்தக் குழப்பம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. யாரோ சிலர் தங்கள் தரப்பு பஞ்சாங்கத்தைத் தயாரிக்கும்போது முழுவதும் ஆலோசிக்காமல் அறிவித்ததால் வந்த குழப்பம் என்றே அறிகிறேன். ஜோதிடத்தில் சாஸ்திரத்தைக் கணிக்கும்போது  வானியலை சுந்தரராம வாஜபாய்மட்டும் கருத்தில்கொண்டு கணிப்பது திருக்கணிதம். வானியலோடு வரருச்சி மகரிஷி எழுதிய தர்மசாஸ்திரம் சொல்வதையும் கருத்தில்கொண்டு கணிப்பது வாக்கிய கணித முறை ஆகும். 

கடந்த ஆண்டு விஜயவாடாவில் காஞ்சி பெரியவா முகாமிட்டிருந்தார். அப்போது இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த 22 ஜோதிஷ கர்த்தாக்களும், 8 தர்மசாஸ்திர வல்லுநர்களையும் வரவழைத்து அவர்கள் முன்னிலையில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பெரியவா ஒப்புதலுடன் செப்டம்பர் 6 -ம் தேதிதான் ஆவணி அவிட்டம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கணித்த சிலர் வெளியிட்ட பஞ்சாங்கத்தால் இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. வேறொன்றுமில்லை. எனவே 'ஆவணி அவிட்டம்' நிகழ்ச்சி அடுத்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதிக்கு நடைபெறுமென்று காஞ்சி சங்கர மடம் சார்பாக, மஹா பெரியவா ஆசீர்வதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்'' என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!