வந்தார்... சென்றார்... தமிழக அமைச்சரின் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி!

தமிழக - கேரள எல்லையில் கம்பம்மெட்டு என்ற பகுதி உள்ளது. அந்தப் பகுதியில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், காவல் சோதனைச் சாவடி ஒன்றை திறந்து வைப்பதாக இருந்தது.

கம்பம் மெட்டு


இதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வருவாய்த் துறைச் செயலாளர் ஆகியோர் கம்பம்மெட்டு பகுதிக்கு வருகை தந்தனர். இதையொட்டி எல்லைப் பகுதியில் தமிழக - கேரள போலீஸ்கள் குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், சோதனைச் சாவடியை திறந்து வைப்பதற்கு முன் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''தமிழக - கேரள எல்லைப் பிரச்னை பல நாள்களாக இருக்கிறது. ஆனால், இரு மாநிலங்களுடன் ஒரு நல்ல உறவைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். சில தனிப்பட்ட நபர்களின் தூண்டுதலால் கம்பம்மெட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. இதுபோன்று சம்பவங்களை தமிழக அரசோ, கேரள அரசோ விரும்பாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது'' என்று தெரிவித்துள்ளார். 

கம்பம் மெட்டு


இதனிடையே, அமைச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சோதனைச் சாவடியை திறந்து வைக்காமல், திடீரென்று காரில் ஏறி சென்றுவிட்டார். அமைச்சர் ஏன் சோதனைச் சாவடியை திறந்து வைக்காமல் சென்றார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!