டி.டி.வி.தினகரன் முக்கிய அறிவிப்பு!

அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்தது. எனவே, நாம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒரு திருவிழாவைப் போல் நடத்திட வேண்டும். இந்த நூற்றாண்டு விழாவின் மூலம் கட்சியின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. எனவே, அவரின் கட்டளையையும் கடமைகளையும் நாம் நிறைவேற்றத் தவறக் கூடாது.' என்று கூறி அ.தி.மு.க-வினருக்கு மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்புடன் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த அறிக்கையுடன், வரும் 5-ம் தேதி முதல் மாவட்டந்தோறும் 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு' சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் இறுதியில், 'அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த சிறப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவேன். இதில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஒப்புதலோடு இந்த பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!