Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரிக் கணக்கு தாக்கல்... இன்றே கடைசி! 

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள வருமான வரி அலுவலகங்களில் வருமான வரி படிவங்களை நேரில் தாக்கல் செய்வோருக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வருமான வரி

வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக வருமான வரித்துறை அலுவலகங்களில் கூடுதல் சிறப்புக் கவுன்ட்டர்களைத் திறந்தும், அதிக அளவில் பணியாளர்களை நியமித்தும் இருந்தது வருமான வரித்துறை. ஆனால், வரித் தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31-ம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. இதனால் வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக வருமான வரித் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் வருமான வரித் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இதற்காக வருமான வரிப் படிவம் தாக்கல் சமர்ப்பிக்க நாடு முழுவதும் நள்ளிரவு வரை வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement