Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கைது..! காவல் நிலையத்துக்கு விரைந்த சீமான்

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனையடுத்து, சீமான் நேரில் சென்று காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவர்களைக் காவல்துறையினர் விடுதலைசெய்தனர்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று மாலை கும்பகோணத்தில் உழவர் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டிருந்த சில பதாகைகளை நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் அகற்றினர். மேலும், ஒரு சில பதாகைகளைக் காவல்துறையினர் கிழித்து சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து அந்தப் பகுதி நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால், அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இந்தத் தகவலை அறிந்த உடனே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் நிலையம் விரைந்தார். அவர், காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement