Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வு! செல்போனுக்குத் தடை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2ஏ தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தலைமையில் தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரத்து 548 பேர் தேர்வெழுத இருக்கிறார்கள். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனத் தேனி வட்டத்தில் 29 மையங்களும் பெரியகுளம் வட்டத்தில் 9 மையங்களும் உத்தமபாளையம் வட்டத்தில் 11 மையங்கள் என மாவட்டம் முழுவதும் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வைக் கண்காணிக்கும் நோக்கோடு, மாவட்டம் முழுவதும் சுமார் 51 தணிக்கை அலுவலர்களும் 14 திடீர் தணிக்கை அலுவலர்களும் 11 பறக்கும் படை அலுவலர்களும் 51 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்களும் 729 அறை கண்காணிப்பு அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் தலா ஒரு காவலர் வீதம் பணியில் இருப்பார்கள். தேர்வைப் பதிவுசெய்யும் நோக்கோடு சுமார் 51 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வறைக்குள் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை. தேர்வுக்கான அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட ஒவ்வொரு விஷயம் தொடர்பாகவும் விரிவாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் கலந்துகொண்டார்.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை நடத்தப்பட இருக்கும் குரூப்2ஏ க்கான தேர்வைச் சிறப்பாக நடத்துவது சம்பந்தமான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்,  "கரூர் மாவட்டத்தில் 10,035 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள். இவர்களுக்காக, 28  மையங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுப் பணியில், 28 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 28 ஆய்வு அலுவலர்கள், 502 அறை கண்காணிப்பாளர்கள், 5 மண்டல அலுவலர்கள் மற்றும் 5 பறக்கும்படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவோர், தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய, கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை சிறப்புப் பேருந்துகள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பேருந்துகளை நிறுத்திச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வுக்கூடங்களில் தரைத்தளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தொலைபேசி மற்றும் இதர எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படித் தேர்வு எழுதுபவர்கள் எலெக்ட்ரானிக் சாதனங்களை வைத்திருப்பது தெரியவந்தால், உடனடியாக அறை கண்காணிப்பாளர்களால் தேர்வு எழுதும் அறையை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். மேலும், தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை, உரிய காவல் பாதுகாப்பு எற்படுத்தப்பட்டு தயார் நிலையிலுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டால்,அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement