Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா! தேனி கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் தங்கவேல் மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் நவம்பர் 4ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழக முதல்வர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு கவனித்துக்கொள்ளும். மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறையின் சார்பில் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட இருக்கிறது. மேலும், பள்ளி கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பும் விழாவின் முக்கிய அங்கமாக இருக்கும். இக்கூட்டத்தின் முடிவில், எம்.ஜி.ஆரின் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி மற்றும் சிறப்பு மலரை விழாவில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement