வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (05/08/2017)

கடைசி தொடர்பு:12:30 (05/08/2017)

''கல் எறியாதீர்கள்... கால்பந்து விளையாடுங்கள்!''- இளைஞர்களைத் திருத்திய இளைஞி

காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல் எறியும் 200 இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டு சொல்லிக்கொடுத்து நல்வழிப்படுத்தியுள்ளார், குவாத்ஷியா என்கிற கால்பந்து வீராங்கனை.

இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் குவாத்ஷியா

காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல் எறிவதும், ராணுவத்தினர் பதிலுக்கு பெல்லட் குண்டுகளால் தாக்குவதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. இதுபோன்ற சம்பவங்களால் மன வேதனையடைந்த கால்பந்து வீராங்கனை குவாத்ஷியா, இன்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு,  கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை அடையாளம் காணத் தொடங்கினார். அவர்களிடத்தில் பேசி, இளைஞர்களின் கவனத்தை கால்பந்து பக்கம் திருப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக  இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டுமீது ஆர்வம் பிறந்தது.

தற்போது, குவாத்ஷியாவிடம் 200 இளைஞர்கள் பயிற்சிபெற்றுவருகின்றனர். ஸ்ரீநகரில், ஆங்காங்கேயுள்ள மைதானங்களில் தினமும் மாலை 3.30 மணி முதல் இருட்டும் வரை, இளைஞர்களுக்கு அவர் பயிற்சி அளிப்பார். குவாத்ஷியாவின் திறமையை அங்கீகரித்து,  காஷ்மீர் மாநில அரசு 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இருபாலர் அணிகளுக்கு அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் கால்பந்து பயிற்சியாளருக்கான சான்றிதழ் பெற்றுள்ள, 23 வயதே நிரம்பிய குவாத்ஷியாவுக்கு, தன் அணியை சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவைப்பதுதான் லட்சியம் என்கிறார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க