கிராமப்புறப் பெண்களுக்கு ஆன் லைன் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் கூகுள்!

கூகுள்

ன்னதான் பல துறைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்துவந்தாலும், சில விஷயங்களில் பின் தங்கித்தான் இருக்கிறார்கள் பெண்கள். சமீபத்தில் கூகுள் செய்த ஆய்வின்படி, கிராமப்புறப் பெண்களில் பெரும்பான்மையானவர்கள், ஆன் லைன் வேலைகளையே பெற விரும்புகிறார்கள் என்கிறது. ஆன் லைன் மூலமாக பொருள்களை விற்பது, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது எனப் பல வேலைகளை வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட் மூலமாகச் செய்ய விரும்புகிறார்கள்.

கூகுள்


ஸ்மார்ட் போன் வந்த புதிதில், அதைத் தொடவே பயந்திருக்கிறார்கள். 'ஸ்மார்ட் போன் நம் நேரத்துக்கும் வாழ்க்கைக்கும் பயமாகக் கருதினார்கள். ஆனால், பெரும்பான்மையான பெண்கள், இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், ஆண்கள்தான் இந்த விஷயத்திலும் டாமினேட் செய்கிறார்கள் என்கிறது கூகுள். 

Internet Saathi program என்கிற புரோகிராமின்படி, புதிதாக இன்டர்நெட் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் பெண்கள் பற்றிய டேட்டாவை எடுத்திருக்கிறது. இதற்காக, ராஜஸ்தானில் 2015-ம் வருடம் இன்டர்நெட் மூலமாக பெண்கள் சுயதொழில் செய்வதற்கான வழியையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது கூகுள்.

இப்படி 2015-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் உள்ள மூன்று லட்சம் கிராமங்களைச் சென்றடைந்திருக்கிறது. Internet Saathi program மூலமாக, நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பெண்களில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள், கூகுளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் இதனால் 10 மில்லியன் பெண்கள் இன்டர்நெட்டை தன் வாழ்நாளில் எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய புரிதலையும் பெற்றிருக்கிறார்கள் என்கிறது கூகுள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!