Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரியில் தென்னை விவசாயம் அழிந்து விடும் சூழல்! தேங்காய் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகப்படியாக நடந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்கள் கருகிப் போய்விட்டன. பல இடங்களில் தென்னை மரங்கள் கருகும் நிலையில் உள்ளன.

coconut price

தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். கருகி வரும் தென்னை மரங்களைக் காப்பாற்ற ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மோட்டார்கள் மூலமும்  தண்ணீர்  பாய்ச்சி வருகிறார்கள். மழை பெய்யாவிட்டால் பல இடங்களில் தென்னை விவசாயம் அழிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு அரசு சார்பில் நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் விளையும் தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

வறட்சி  காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது வழக்கத்தைவிட சுமார் 50 சதவிகிதம் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உற்பத்தி குறைந்து வரும்  நிலையில் தேங்காயின் தரமும் குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக தேங்காயின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூபாய் 30-க்கு விற்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement