சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் 14-ம் தேதி புஷ்பாபிஷேகம் | Pushpabhishekam at Susindram Thanumalayan temple

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/08/2017)

கடைசி தொடர்பு:17:20 (05/08/2017)

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் 14-ம் தேதி புஷ்பாபிஷேகம்

தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடிக் கடைசித் திங்கள்கிழமையையொட்டி புஷ்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 14-ம் தேதி  ஆடிக் கடைசித் திங்கள்கிழமை சுசீந்திரம் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் காலை அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6.20 மணிக்கு சிவன், விஷ்ணு.நடராசர் மற்றும் கோயில் உட்பிரகாரத்திலுள்ள சுவாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. புஷ்பாபிஷேகத்துக்காக கிரேந்தி, வாடாமல்லி ஆகிய மலர்கள் தவிர்க்கப்படுகிறது. இறுதியாக ஆஞ்சநேயர் சுவாமிக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெறும் பக்தர்கள் புஷ்பாபிஷேகத்துக்குப் பூக்களை வழங்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுபோல சுசீந்திரம் கோயிலில் உள்ள திருவேங்கட விண்ணகப் பெருமாளுக்கு வருடம்தோறும் ஆவணித் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆவணித் திருவிழா, வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி  காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நடக்கும் 10 நாள்களும் காலை, மாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, வாகன பவனி, ஸ்ரீபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் நாளான  செப்டம்பர் 5-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு அலங்கரிப்பட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளை இந்திரத் தேரில் வைத்து ரத வீதியைப் பக்தர்கள் சுற்றி வருகின்றனர். அதற்கான விழா ஏற்பாடுகளைத் தீவிரமாகத்  திருக்கோயில் நிர்வாகமும் பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க