Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒவ்வொரு குழாயும் கொலைக்கான ஆயுதம்'- இயக்குநர் கெளதமன் ஆவேசம்

இயக்குநர் கொளதமன்

''பெட்ரோ கெமிக்கலுக்காக வரும் ஒவ்வொரு குழாயும் கொலைக்கான ஆயுதம். அதை எங்கள் பிணத்தின் மீதுதான் பதிக்கவேண்டும்'' என்று இயக்குநர் கெளதமன் ஆவேசமாக கூறினார்.

கடலூரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழர் உரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் வ.கெளதமன், "வளர்ச்சித் திட்டம் என்று கூறி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே சிப்காட், என்.எல்.சி, புதிய வீராணம், இயற்கை சீற்றம் போன்றவற்றால் கடலூர் மாவட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. அதுபோதாது என்று, புதியதாக 'பெட்ரோ கெமிக்கல்' மண்டலம் என்ற பெயரில் கடலூர், நாகை மாவட்டங்களை நிரந்தர சுடுகாடாக்கப் பார்க்கிறார்கள்.

இத்திட்டத்துக்காக கொண்டுவரும் ஒவ்வொரு குழாயும் கொலைக்கான ஆயுதம். அதை எங்கள் பிணத்தின் மீதுதான் பதிக்கப்படவேண்டும். பூமிப் பந்திலிருந்து தமிழன் என்ற இனத்தை அடியோடு அழித்துவிட முயலுகிறது மத்திய அரசு. ஒருபோதும் அது நடக்காது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட கடலூர் வரும் முதல்வர் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டுத்தான் வரவேண்டும். இல்லையென்றால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல் இங்கேயும் ஒரு போராட்டம் வெடிக்கும்" என்றார் காட்டமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement