Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 3,949 கோடி ரூபாய் ஒதுக்கீடு- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

''தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 3,949 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு புது ரயில்விடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது'' என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தென் தமிழக மக்களின் நீண்டநாள் கனவு மற்றும் நமது தொடர் முயற்சியின் காரணமாக நம் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலி வழியாக வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வரையிலான 102 கிலோ மீட்டர் தூரம் இருவழித்தடம் மற்றும் மின்மயமாக்கப்படுவதற்கு  ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்துக்காக 1,114.62 கோடி ரூபாய் உத்தேச மதிப்பாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி வரையிலான 160 கிலோ மீட்டர் ரயில் தடம் இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கப்பட 1,275.51 கோடி ரூபாயும், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையேயான 86.56 கிலோ மீட்டர் தூர இருவழித்தடம் மற்றும் மின்மயமாக்கப்பட 1,552.94 கோடி ரூபாயும் ஒதுக்கித் திட்டத்தை நிறைவேற்ற உத்தேச மதிப்புக்கான ஒப்புதலை மோடி வழங்கியுள்ளார்.

''கன்னியாகுமரி - வாரணாசி மார்க்கத்தில் புதிய ரயில் சேவை தொடங்குவது குறித்தும், புனே - திருநெல்வேலி வரையிலான (01322) வாராந்திர ரயில் சேவையைக் கன்னியாகுமரி வரை நீட்டித்திடவும், வாரம் இருமுறை இயங்கும் அம்சஃபார் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவையை டெல்லி முதல் கன்னியாகுமரிவரை இயக்கிடவும், மேலும் தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு ரயில் சேவைகள் குறித்தும் வலியுறுத்தினேன்'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement