Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அ.தி.மு.க அணிகள் அனைத்துமே பா.ஜ.க-வைத்தான் ஆதரிக்கின்றன' - பா.ஜ.க மாநிலச் செயலாளர் பேட்டி

srinivasan

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நகைத் தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மத்திய மாநில அரசின் தொழிற்கடன் திட்ட விளக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலச் செயலாளர்  இரா.ஸ்ரீனிவாசன், ‘’ அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் அனைத்தும் பா.ஜ.க.வையே அதிரிக்கின்றன’’ என்று பேசினார்.

நகைத் தொழிலாளர்களுக்கு திறன் சான்றிதழ்களை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீனிவாசன், ‘’ ஸ்கில் இந்தியா திட்டம் மூலமாக மத்திய அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி வருகிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி என எத்தனை அணிகள் இருந்தாலும் அத்தனை அணிகளுமே பா.ஜ.க-வைத்தான் ஆதரிக்கின்றனர். தினகரன்கூட, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எங்களுடைய பா.ஜ.க வேட்பாளர்களுக்குத்தான் ஆதரவை தெரிவித்தார். தனித்தனி அணிகளாக கோஷ்டி பூசல்கள் ஏதும் இல்லாமல் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சிதான்.

srinivasan issued certificate

சமீப காலமாகவே தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க மீது அதீத பயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த நிலையில் தி.மு.க உடனே ஆட்சிக்கு வந்துவிடும் என நினைத்தார் அவர். ஆனால், அது நடைபெறாமல் போய்விட்டது.  அதற்கு காரணம் பிரதமர் மோடிதான் என நினைத்துக்கொண்டு பா.ஜ.க-வைப் பார்த்துப் பயப்படுகிறார். எங்களுக்குப் புறவாசல் வழியாக வந்து பினாமி ஆட்சி நடத்திட வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. ‘’ என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement