Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க., அ.தி.மு.க. இருவருமே குற்றவாளிகள்! - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை எதிர்த்து, கடலூர் மாவட்டத்தில் கிராம மக்களை சந்தித்து வருகிறார் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்

 


இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், அரியகோஷ்டி, கடவாச்சேரி கிராமங்களில் அப்பகுதி மக்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நேரடியாக 2 லட்சம் பேர்களும், மறைமுகமாக 20 லட்சம் பேர்களும் பாதிக்கப்படுவார்கள். இதற்காக 57 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் கடலூர், நாகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இதனால் விவசாயிகளும், மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடுவார்கள். பிழைப்புக்காக இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு ஓடும் அவலம் ஏற்படும்.


கேரளா, மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இத்திட்டத்தை கொண்டுவந்த தி.மு.க.தான் முதல் குற்றவாளி. அ.தி.மு.க இரண்டாவது குற்றவாளி. இத்திட்டத்தை ரத்து செய்யும்வரை நாங்கள் ஓயமாட்டோம். இதற்காக மாணவர்கள், இளைஞர்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்துவோம். அதன் மூலம் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றார் ஆக்ரோஷமாக.                               

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement