'டி.டி.வி தினகரன் அணியில் எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை': பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு அறிவிப்பு! | I do not need any responsibility in the TTV Dinakaran Faction, Says Periyakulam MLA KathirKamu

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (05/08/2017)

கடைசி தொடர்பு:18:59 (05/08/2017)

'டி.டி.வி தினகரன் அணியில் எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை': பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு அறிவிப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இணைய  டி.டி.வி.தினகரன் கொடுத்த 60 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.  இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வருவார் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இப்பதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், சத்யா பன்னீர்செல்வம், பழனி போன்றோர் அதிரடியாக அந்தப் பதவிகள் வேண்டாம் என்று அறிவித்தனர். இந்நிலையில், நம்மிடம் பேசிய பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, "அம்மாவின் ஆசியுடன் சட்டமன்ற உறுப்பினராக ஆனவன் நான், இன்று கழகம் பல அணிகளாக பிரிந்துகிடப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. அம்மா சொன்னதுபோல் இன்னும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து செயல்படவேண்டும்.

கதிர்காமு

அதனால் தற்போது தினகரன் கொடுத்துள்ள பதவி எனக்கு வேண்டாம். அம்மாவின் மக்கள் திட்டங்களை சட்டமன்ற உறுப்பினராக இருந்து செயல்படுத்தவே விரும்புகிறேன். அதனால் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்." என்றார். முன்னதாக அம்மா அணியின், கழக மருத்துவரணி இணைச்செயலாளராக தினகரனால் கதிர்காமு அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close