"விவசாயிகளை வாழவிடு": தஞ்சையில் மாநாடு!

'விவசாயிகளை வாழவிடு' என்ற தலைப்பில் தஞ்சாவூர் திலகர் திடலில் தற்பொழுது மாநாடு நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெற்றது. வறட்சியின் காரணமாக விவசாயிகள் சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடிகள், நீர் மேலாண்மை, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள், அரசின் வேளாண் கொள்கைகள், கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இம்மாநாட்டில் உரையாற்றிய பலரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியும், அதன் ரசிகர்களும்தான் அதிகம் வதைத்தெடுக்கப்பட்டார்கள்.  "ஒவியா தற்கொலை செய்துகொள்வாரோ என்று பார்வையாளர்கள் பதறுகிறார்கள். ஆனால், விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி  அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை" என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கொந்தளித்தார்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளான மருதையன், காளியப்பன், வழக்கறிஞர் ராஜூ உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் உரையாற்றினார்கள்.

நேருரைகள் என்ற அமர்வில் கதிராமங்கலம், நெடுவாசல் மக்கள்  தாங்கள் சந்தித்து வரும் எரிவாயு திட்டங்களின் நெருக்கடிகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். வீரசோழ தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

'விவசாயிகள் மரணம்' என்ற செய்தியை படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இனியாவது 'விவசாயத்தை வளர்ப்போம், விவசாயிகளைப் பாதுகாப்போம்'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!