வெளியிடப்பட்ட நேரம்: 00:55 (06/08/2017)

கடைசி தொடர்பு:10:56 (07/08/2017)

“8 மாநிலங்களில் ஜிஎஸ்டிக்கு எதிராகப் போராட்டம்!” காஞ்சிபுரத்தில் விக்கிரமராஜா அறிவிப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பத்தாவது ஆண்டு தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூரில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஜிஎஸ்டிக்கு எதிரான மாபெரும் போராட்டம் ஒன்றை அறிவித்தார் விக்கிரமராஜா.

விக்கிரமராஜா

விழாவில் பேசிய விக்கிரமராஜா, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரியால் நடுத்தரக் குடும்பங்களும், ஏழைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் எதிரானது ஜிஎஸ்டி. இதனால் விலைவாசி குறையும் என்பது ஏமாற்று வேலை. இட்லி, தோசை, கடலை மிட்டாய், வாட்டர் கேன் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி வரியைப் போடுகிறார்கள். அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியைப் போடுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பில் உள்ளார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டிக்கு எதிராக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தென்மண்டல அமைப்பு சார்பாக எட்டு மாநிலங்களில் போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அவரும் மத்திய அரசுடன் பேசுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் எங்கள் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க