ஓ.பி.எஸ். கூட்டத்தில் கத்தியுடன் மர்ம நபர்: விமான நிலையத்தில் பரபரப்பு!

திருச்சி விமான நிலையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்திறங்கியபோது, அந்தக் கூட்டத்தில் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ops

ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்திறங்கியபோது திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவர் கூட்டத்தில் கத்தியுடன் நுழைந்துள்ளார். குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சோலைராஜனை மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதுதொடர்பான விசாரனையில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி வேல்முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்

இன்று காலையில் திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னிர் செல்வம், எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகிய மூன்று அணியைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக சந்தித்துக்கொண்டனர். இவர்கள் மூவரும் விமான நிலையத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினர்.

இவர்கள், பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பேசியிருக்கலாம் என்ற கருத்தும் கட்சி வட்டாரத்துக்குள் உலவி வருகிறது. ஆனால், மரியாதை நிமித்தமான உரையாடல் மட்டுமே இருந்ததாக ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!