நாளை சந்திர கிரகணம் : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி திங்கட்கிழமை,  நடைதிறப்பு மற்றும் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஆகஸ்ட் 7-ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.50 மணி முதல் நள்ளிரவு 12.44 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. எனவே, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து நடக்கும் மற்ற பூஜைகள் வழக்கமான நேரப்படி நடக்கும். பின்னர், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்பாடு மற்றும்  ராக்கால அபிஷேகமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்ததும் நடை சாற்றப்படுகிறது. மீண்டும், இரவு 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின் சுவாமிமீது பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு நடைதிருக்காப்பு இடப்படுகிறது. மீண்டும் அதிகாலை 3 மணிக்கு புண்ணியாகவாஜனமும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும்’  என திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      tiruchendur

Do you like the story?

Please Appreciate the Author by clapping!